டெல்லியில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் மருத்துவர் ஒருவருக்கு தற்போது கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தகவலின்படி, கரோனா பாதிக்கப்பட்ட மருத்துவருடன் 18 மருத்துவர்கள், நேரடி தொடர்பில் இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் மருத்துவரின் மனைவி, மகள், அவருடன் வேலைபார்க்கும் ராணுவ அலுவலர் ஆகியோரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர் பணிபுரியும் அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு, வரும் 19ஆம் தேதி வரை சீல் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இதுவரை 1,561 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு காரணமாக 28 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:கோவிட் - 19: மனிதர்களுக்குப் பதில் ரோபோக்கள், 3 இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு