அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து தற்போது அது சட்டமாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்தச் சட்டம் குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'புதிய சட்டங்கள் மூலம் இனி நாட்டின் அனைத்து விவசாயிகளும் தன்னிறைவு பெற்று அவர்கள் பயிர் கொள்முதல் செய்யும் திறன் மேம்படும். உதாரணமாக கடந்த ஆட்சி காலத்தில் 2013-14 காலக்கட்டத்தில் பாசிப்பருப்பை அன்றைய அரசு கொள்முதல் செய்யவில்லை. அதேவேளை, 2019-20 காலக்கட்டத்தில், சுமார் 1.66 லட்சம் மெட்ரிக் டன் பாசிப்பருப்பை தற்போதைய அரசு கொள்முதல் செய்துள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.