ரிசர்வ் வங்கியின் சார்பாக மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளுக்கு நலன் சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கான பிணை இல்லா கடனின் உச்சவரம்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஒரு லட்சம் ரூபாய் வரை பிணையில்லாமல் விவசாயக் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த தொகையில் ரூ.60 ஆயிரத்தை உயர்த்தி மொத்தமாக ரூ.1.60 லட்சம் ரூபாய் வழங்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பிணையில்லா கடன்தொகை உயர்வு!
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிணையில்லா கடன் தொகையை உயர்த்தி அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, ரூ.1.60 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
மேலும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி தற்போதைய 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநர் சக்திகாந்ததாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.