விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை, உடனடியாக திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் லட்சக்கணக்கானோர், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை டெல்லியின் எல்லைகளில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இருப்பினும் அதனையும் மீறி அவர்கள் முன்னேறி வருகின்றனர்.
கொட்டும் மழையில் ஏர்கலப்பை, நெற்கதிர்களுடன் போராட்டம்! - கொட்டும் மழையில் ஏர்கலப்பை, நெற்கதிர்களுடன் போராட்டம்
புதுச்சேரி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை எதிர்த்தும் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கொட்டும் மழையில் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் வீரஞ்செறிந்த இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், ஏர்கலப்பை, கதிர் அரிவாள், நெற்கதிர்கள், வாழைத்தார், கரும்பு உள்ளிட்டவற்றை கையில் ஏந்தியபடி, விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:’விவசாயிகளுக்கு துரோகம் இழைக்காதீர்கள்’ - ராகுல் காந்தி