கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் கிரிஷ். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மங்களூரு காவல் துறையினர் கிரிஷை கைது செய்ய சென்ற போது காவல் துறையினர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் காவல் துறையினர் தற்காப்பிற்காக கிரிஷை காலில் சுட்டு பிடித்தனர்.
காவல் துறையினரை தாக்கிய பிரபல ரவுடி கைது! - famous rowdey
மங்களூரு: காவல் துறையினரை தாக்கிய பிரபல ரவுடியை மங்களூரு காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
பிரபல ரவுடி கிரஷ்
காயமடைந்த கிரிஷை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.