தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் வெற்றியைக் கணித்த ஜோதிடர் கரோனாவால் உயிரிழப்பு - பிரதமர் மோடியின் வெற்றியைக் கணித்த ஜோதிடர் கரோனாவால் இறப்பு

அகமதாபாத்: பிரபல நகைச்சுவை ஜோதிடர் பெஜன் தாருவாலா (Bejan Daruwala) கரோனாவால், தனது 89ஆவது வயதில் இன்று காலமானார்.

Famous Indian astrologer
Famous Indian astrologer

By

Published : May 29, 2020, 11:08 PM IST

நகைச்சுவையான இந்திய ஜோதிடர் பெஜன் தாருவாலா, கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டார். பின்பு சிகிச்சைப் பலனின்றி இன்று உயிர் இழந்துள்ளார்.

பிரதமர் மோடியின் வெற்றிகள், ராஜிவ் காந்தி படுகொலை, போபால் எரிவாயு சோகம் மற்றும் பலவற்றை அவர் முன்னதாகவே கணித்திருந்தார். இவர் ஒரு தீவிர விநாயகர் பக்தர் ஆவார். மேலும் ஜோதிடர் பெஜன் தாருவாலா வேத, மேற்கத்திய ஜோதிடம், நியூமராலஜி மற்றும் கைரேகை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்.

இதையும் படிங்க: உலகளவில் 15ஆயிரம் ஊழியர்களை கைவிடுகிறது ரெனால்ட் நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details