புகழ்பெற்ற வாகன வடிவமைப்பாளரும், டி.சி கார்களின் உரிமையாளருமான திலீப் சாப்ரியாவை மோசடி வழக்கில் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் பிரபல கார் வடிவமைப்பாளர் கைது! - காவல்துறையினர் வழக்குப்பதிவு
மும்பை: மோசடி வழக்கில் பிரபல கார் வடிவமைப்பாளரும், டி.சி கார்களின் உரிமையாளருமான திலீப் சாப்ரியா மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிரபல வாகன வடிவமைப்பாளரான சாப்ரியா, பாலிவுட் நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர்களின் வாகனங்களை மாற்றி வடிவமைத்து வழங்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். பிரபல வாகன வடிவமைப்பாளரான அவர் மீது, கடந்த 10 நாள்களுக்கு முன் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், அவரை மோசடி வழக்கில் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று(டிச.28) கைது செய்தனர். திலீப் சாப்ரியா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மும்பை இணை ஆணையர் மிலிந்த் பரம்பே உறுதிப்படுத்தினார்.