பிரதமர் நிவாரண நிதி வங்கிக் கணக்கு போன்றே சில போலியான யூபிஐ (UPI) ஐடிகள் அடையாளம் தெரியாத நபர்களால் இயக்கப்படுவதாக இணையதள குற்றப் பிரிவு காவலர்களுக்கு புகார்கள் கிடைத்தது.
இது தொடர்பாக இணையதள குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து இணையதள குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் கே.வி.எம். பிரசாத் கூறுகையில், “பிரதமர் நிவாரண நிதி வங்கிக் கணக்கான பி.எம் .கேர்ஸ் (pmcares@sbi) போன்று, அதனை ஒத்த வகையில் பல போலி ய.பி.ஐ. ஐடிகள் புழக்கத்தில் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை குழு ((சி.இ.ஆர்.டி) இணையதள குற்றப்பிரிவு காவலர்களை எச்சரித்தது.