தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலி ஜிஎஸ்டி ரசீது: ரூ. 600 கோடி வரி ஏய்ப்பு செய்ய முயன்ற 3 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு! - போலி ஜிஎஸ்டி ரசீது

டெல்லி: ஐஜிஎஸ்டி தொகையைப் பெறுவதற்காக போலி ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடன் ரசீதுகளைப் பயன்படுத்திய மூன்று நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

fake-gst-invoice-tax-officers-arrest-3-book-three-firms-for-tax-evasion-worth-rs-600-crores
fake-gst-invoice-tax-officers-arrest-3-book-three-firms-for-tax-evasion-worth-rs-600-crores

By

Published : Jul 28, 2020, 2:10 PM IST

ஜிஎஸ்டி, மத்திய கலால் வரி, சேவை வரி தொடர்பான மோசடிகள் மற்றும் வரி ஏய்ப்புகளைக் கண்டறிவதற்காக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று நிறுவனங்கள் போலி ரசீதுகள் மூலம் ஐஜிஎஸ்டி தொகைப் பெற முயற்சித்த சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.

ஐஜிஎஸ்டி தொகையைப் பெறுவற்காக போலி ரசீதுகளைப் பயன்படுத்தியதாக ஃபார்சூன் கிராஃபிக்ஸ் லிமிடெட், ரீமா பாலிசெம் பிரைவேட் லிமிடெட், கணபதி எண்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து நிதியமைச்சக அலுவலர்கள் பேசுகையில், ''இந்த மூன்று நிறுவனங்களும் எந்தவொரு உண்மையான பொருள்களையும் ஏற்றுமதி செய்யாமல், ஐஜிஎஸ்டி தொகையைப் பெறுவதற்காக போலி ஜிஎஸ்டி ரசீதுகளை சமர்பித்துள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனன்யா நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டு விசாரித்து வரும் வழக்கில் கிடைத்த தகவல்களைக் கொண்டு, இந்த மூன்று நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின்போது, ஃபார்சூன் கிராஃபிக்ஸ் லிமிடெட், ரீமா பாலிசென் பிரைவேட் லிமிடெட், கணபதி எண்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் ரூ. 600 கோடி மதிப்புள்ள உள்ளீட்டு வரிக் கடனில் மோசடி செய்ய ஜிஎஸ்டி போலி ரசீதுகள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் மூன்று பேர் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேளாண் துறைக்கு ஆதரவாக காரணிகள் மாறிக் கொண்டிருக்கின்றன - ரிசர்வ் வங்கி ஆளுநர்

ABOUT THE AUTHOR

...view details