ஆப் ஸ்டோரில் உள்ள CoWIN செயலியில் தகவல்களை பதிவு செய்யவோ பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என மக்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துரை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "அரசின் அதிகாரப்பூர்வ செயலி ஒன்று அறிமுகமாக உள்ளது. அதேபோன்று, ஒரே மாதிரியான பெயரில் CoWIN என்ற செயலியை சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் ஒன்று உருவாக்கி ஆப் ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்யாதீங்க... மக்களே உஷார்
டெல்லி: சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் உருவாக்கிய CoWIN ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், தங்களின் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்யவோ, செயலியை பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செயலி அறிமுகம் செய்யப்படும்போது விளம்பரம் செய்யப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணியை பெரிய அளவில் தீவிரப்படுத்தவும் நிர்வகிக்கவும் COVID Vaccine Intelligence Network என்ற CoWIN செயலி பயன்படவுள்ளது. தடுப்பூசி போடும் பணியை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல் தடுப்பூசி விநியோகத்தை நிகழும்போதே கண்காணிக்கவுள்ளது. ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.