மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக நடைபெற்ற அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், யாரும் எதிர்பாரா விதமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் தேவேந்திர ஃபட்னாவிஸே பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தொண்டர்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக பாஜக சார்பில் பரப்புரை மேற்கொண்ட ஃபட்னாவிஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், சரத் பவார் மற்றும் அஜித் பவாரையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். ஊழல் பெருச்சாளிகள் போன்ற கடும் சொற்களால் இருவரையும் தாக்கி ஃபட்னாவிஸ் பரப்புரை செய்தார். ஆனால், தற்போது ஃபட்னாவிஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.