தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகனை கண்டுபிடிக்க உதவிய ’ஃபேஸ் ஆப்’ செயலி - parents find son

சீனாவில், 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனை ’ஃபேஸ் ஆப்’ செயலி மூலமாக பெற்றோர் கண்டறிந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஃபேஸ் ஆப் செயலி

By

Published : Jul 21, 2019, 7:20 PM IST

சமீபகாலமாக ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் ட்ரெண்ட் ஆகி கொண்டிருப்பது ஃபேஸ் ஆப் சேலஞ்ச். இந்த ’ஃபேஸ் ஆப்’ செயலி மூலம் அனைவரும் தங்களது புகைப்படங்களை வயதான தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் உடனுக்குடன் மாற்றி பகிர்ந்துவருகின்றனர். பிரபலங்கள் முதல் சாமானியர்கள்வரை இந்த செயலிக்கு வரவேற்பு கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த தம்பதி இணையத்தில் வைரல் ஆகிவரும் ’ஃபேஸ் ஆப்’ செயலி மூலம் 18 வருடங்களுக்கு முன்பு காணாமல்போன மகன் ஷை யு வீபெங் (Shy Yu Weifeng) கண்டறிய முடிவெடுத்துள்ளனர்.

அதன் பேரில், அவரது சிறு வயது புகைப்படங்கள் பலவற்றை ’ஃபேஸ் ஆப்’ செயலி மூலம் தற்போதைய உருவத்திற்கு மாற்றினர். அதன்பிறகு, காவல்துறையின் உதவியுடன் நீண்ட தேடலுக்கு பின்னர் தனது மகனை அவர்கள் கண்டறிந்துள்ளனர். தங்களது மகன்தான் என டி.என்.ஏ பரிசோதனையிலும் உறுதிப்படுத்தப்பட்டதால் அவர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details