ஹைதராபாத்: தற்கொலை என்பது அறிந்தோ, அறியாமலோ தன்னைத் தானே கொலை செய்து கொள்வதாகும். தற்கொலைக்கு காரணமாக ஆளுமை சிதைவு, குடிப்பழக்கம், குற்ற உணர்வு, இயலாமை, வெட்கம், உடல் வலி, பொருளாதாரத் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன.
எனினும் பெரும்பாலும் இளவயது தற்கொலைகள் மன அழுத்தம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட காரணிகளால் நிகழ்கின்றன. இவ்வாறான தற்கொலைகளை தடுக்கும் விதமாக 2003ஆம் ஆண்டு முதல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் உலக சுகாதார அமைப்பு, சர்வதேச போதைப் பொருள்கள் தடுப்பு பிரிவு, மன ஆரோக்கியத்திற்கான உலக கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இது தொடர்பாக எண்ணங்களை நீக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 10ஆம் தேதியை, சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாகவும் அனுசரிக்கின்றன.
பெரும்பாலும், தற்கொலை தடுப்பு ஒரு உலகளாவிய சவாலாக உள்ளது. சர்வதேச அளவில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இதற்குப் பின்னால் பல விதமான காரணிகள் உள்ளன.
ஒரு நபரின் தற்கொலை அவரது குடும்பத்தினரை வெகுவாக பாதிக்கிறது. உலகெங்கிலும் 108 மில்லியன் மக்கள் தற்கொலையால் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலைகள் உலகளவில் 60 சதவீதம் அதிகரித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் 15-24 வயதுடைய நபர்கள் அதிகளவு தற்கொலை செய்துள்ளனர். மேலும் பருவ வயதான சிறுமிகளும் அதிகளவு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதேபோல் பதின்ம வயது பெண்களும் தற்கொலை உணர்வுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிழக்காசிய நாடுகளில் 39 விழுக்காடு பேர் தற்கொலையால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இந்நாடுகளில் வருமானம் மிக குறைந்து காணப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த வகை தற்கொலைகள் வேலைவாய்ப்பு பிரச்னைகள், தனிமை, பாலியல், வன்முறை, குடும்ப பிர்சனை, மனச்சிதைவு, குடிப்பழக்கத்துக்கு அடிமையாதல், பொருளாதார இழப்பு, நாள்பட்ட நோய் பிரச்னைகள் ஆகியவற்றால் நிகழ்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் நாட்டில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123 தற்கொலைகள் அறங்கேறியுள்ளன. இது 2018ஆம் ஆண்டை காட்டிலும் 3.4 விழுக்காடு அதிகமாகும்.
இதையும் படிங்க :சுஷாந்த் சிங் வழக்கு: விசாரணை வளையத்தில் 25 பாலிவுட் பிரபலங்கள்!