தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க தயார்' - உமா பாரதி - அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம்

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கத் தயார் என ம.பி.,யின் முன்னாள் முதலமைச்சரும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கத் தயார் -உமா பாரதி..!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கத் தயார் -உமா பாரதி..!

By

Published : Sep 17, 2020, 7:38 PM IST

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, சிபிஐ சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் இவ்வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 30ஆம் தேதி வழங்கவுள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் தீரப்பு தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் துணை பிரதமர் அத்வானி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரும் தீர்ப்பன்று நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கத் தயார் -உமா பாரதி..!

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான உமா பாரதி இது குறித்து ஈடிவி பாரத் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அதில், நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளதால், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கத் தயார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' - ராஜ்நாத் சிங்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details