தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட்டின் தாக்கத்தை உணர திங்கள் வரை காத்திருங்கள்: நிர்மலா சீதாராமன் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை கார்ப்பரேட் துறையில் உணரவேண்டும் என்றால் நாம் அனைவரும் திங்கள்கிழமை போன்ற சாதாரண வர்த்தக நாள் வரை காத்திருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

exclusive-sitharaman-says-wait-till-monday-to-see-full-impact-of-budget
exclusive-sitharaman-says-wait-till-monday-to-see-full-impact-of-budget

By

Published : Feb 1, 2020, 11:50 PM IST

2020-21ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கிடையே மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறையில் எவ்வித ஏற்றங்களும் இன்று ஏற்படவில்லை.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை கார்ப்பரேட் துறையில் உணரவேண்டும் என்றால் நாம் அனைவரும் திங்கள்கிழமை போன்ற சாதாரண வர்த்தக நாள் வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

மேலும், “மக்களுக்கான வரி விகிதங்களை ஐந்து அடுக்குகளாக மாற்றியும் இன்றைய வர்த்தக நாளின் முடிவின் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 987 புள்ளிகளும், நிஃப்டி 300 புள்ளிகளும் குறைந்தன.

நுகர்வோரின் தேவை குறைந்ததே நாட்டின் ஜிடிபி வளர்ச்சி குறைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது. எனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள வரி விகித மாற்றங்கள் மக்களின் வருமானத்தை அதிகரித்து நுகர்வோரை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் இந்திய ஜிடிபியின் வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும். தற்போது நிதிப்பற்றாக்குறை 3.8 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக குறையும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details