புத்த மத தலைவர் தலாய் லாமா தனியார் செய்தி நிறுவனத்திற்கு நேற்று அளித்த பேட்டியில் அகதிகள், ஐரோப்பியர்கள் பற்றி கேட்கபட்ட கேள்விகளுக்கு அதிரடியான பதில்களை அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஐரோப்பாவில் இருக்கும் அகதிகள் திரும்ப அவர்கள் நாட்டுக்குச் செல்லவில்லை எனில் அந்த கண்டமே இஸ்லாமியர் கண்டமாகவோ அல்லது ஆப்ரிக்கர்களின் நாடாகவோ மாறிவிடும்.
‘ஐரோப்ப கண்டம் ஐரோப்பியர்களுக்கே’ - தலாய் லாமா - அகதிகள்
ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் அகதிகள் திரும்பிச் செல்லவில்லை எனில் ஐரோப்பா கண்டம் இஸ்லாமியர் நாடாக மாறிவிடும் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
dalai lama
ஆனால் ஐரோப்பிய கண்டம் அகதிகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான கல்வி, பயிற்சி ஆகியவற்றை வழங்க வேண்டும். அதற்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டிற்கு சில திறமைகளோடு செல்ல வேண்டும்.
ஐரோப்பா கண்டம் ஐரோப்பியர்களுக்கே. அகதிகள் அவர்களின் திறன்களைக் கொண்டு ஒன்று சேர்ந்து அவர்களுக்கான நாட்டினை உருவாக்கிக் கொள்ள வேண்டும்" என்றார்.