கர்நாடக மாநிலம், சன்னராயபத்னா தாலுகாவில் அம்ருத் மஹால் மாட்டுப் பண்ணை இயங்கி வருகிறது. இங்கு 230க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று வருடங்களாக, இங்கு மாடுகளின் கழிவுகள் அகற்றப்படாமல், மூன்று அடி அளவுக்கு அவைகள் இருக்கும் இடத்தில் தேங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நமது ஈடிவி பாரத் ஊடகத்தின் செய்தியாளர்கள் செய்தி திரட்டச் சென்றுள்ளனர். அவர்களைப் பண்ணை உரிமையாளர்கள் அனுமதிக்காததைத் தொடர்ந்து, மதில் மீது ஏறி அனைத்தையும் படம்பிடித்து நமது ஈடிவி பாரத் இணையதளத்தில் செய்தியாக்கியுள்ளனர்.
கூடத்தில் குடும்ப சொத்து வழக்கு: 12 பேர் மீது வழக்குப்பதிவு!
இவ்விவகாரம், வெளிச்சத்துக்கு வரவே, ஹாஸன் மாவட்ட ஆட்சியரும், அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் உடனடியாக பண்ணைக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது 230க்கும் மேற்பட்ட மாடுகள் 3 அடி கழிவில் நின்றும், உறங்கியும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சாகும் நிலையில் 230 மாடுகள்! வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஈடிவி பாரத் உடனடியாக கால்நடை மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு, அனைத்து மாடுகளும் பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும், இந்நிகழ்வை வெளியுலகத்துக்கு காட்சிப்படுத்திய ஈடிவி பாரத் பாரத் செய்தி குழுமத்துக்கு மாவட்ட ஆட்சியரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.