தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: டெல்லியில் பழுதடைந்த சாலைக்குத் தீர்வு! - டெல்லி சாலை பழுது

டெல்லி: பிரஹால்த்பூர் கிராமத்கில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் குறித்து ஈடிவி பாரத் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக, அச்சாலை சீரமைக்கப்படும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

road construction
road construction

By

Published : Jul 8, 2020, 7:27 AM IST

டெல்லி கன்டோன்மென்ட் தொகுதியில் உள்ள பிரஹால்த்பூர் கிராமத்கில் சாலை மேடும் பள்ளமுமாக இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வேலைக்குச் செல்வோர் முதல் சாலையில் நடந்து செல்வோர் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் சிரமமாக இருந்தது.

சாலை சீரமைக்கும் பணி

இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவித்தப் புகாரின் அடிப்படையில் நமது ஈடிவி பாரத் வெளியிட்ட செய்தியின் எதிரொலியால், டெல்லி கன்டோன்மென்ட் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் வீரேந்தர் சிங், முன்வந்து அக்கிராமத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது அப்பகுதியில் சாலை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட காரணத்தால் வெகுகாலமாக பழுதடைந்து கிடந்த சாலை சரிசெய்யப்பட்டு வருவதால், அக்கிராம மக்கள் ஈடிவி பாரத்திற்கு தங்களின் நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: டெல்லியில் பழுதடைந்த சாலைக்குத் தீர்வு!

இதையும் படிங்க:30 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை, தவிக்கும் ’சிக்கல்’ கிராம மக்கள் - செவி சாய்க்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details