தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 வெளிப்படைதன்மைக்கு எஸ்டோனியா அழுத்தம் கொடுக்கும்! - கோவிட்-19 வெளிப்படைதன்மைக்கு எஸ்டோனியா அழுத்தம் கொடுக்கும்

டெல்லி: வட ஐரோப்பிய நாடான எஸ்டோனியா நாட்டுக்கான இந்திய தூதர் கேத்ரீன் கிவி, ஈடிவி பாரத்தின் மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மாவுக்கு பிரத்யேகமாக காணொலி மூலமாக பேட்டியளித்தார். அப்போது புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோய் தொடர்பான வெளிப்படைதன்மைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

Estonia ambassador  India-Estonia relation  Smita Sharma  Katrin Kivi  COVID-19 in UNSC  Digital technology  கோவிட்-19 வெளிப்படைதன்மைக்கு எஸ்டோனியா அழுத்தம் கொடுக்கும்  ஸ்கைப், எஸ்டோனியா, கேத்ரீன் கிவி, ஸ்மிதா சர்மா, ஈடிவிபாரத், கோவிட்-19, கரோனா வைரஸ்
Estonia ambassador India-Estonia relation Smita Sharma Katrin Kivi COVID-19 in UNSC Digital technology கோவிட்-19 வெளிப்படைதன்மைக்கு எஸ்டோனியா அழுத்தம் கொடுக்கும் ஸ்கைப், எஸ்டோனியா, கேத்ரீன் கிவி, ஸ்மிதா சர்மா, ஈடிவிபாரத், கோவிட்-19, கரோனா வைரஸ்

By

Published : May 1, 2020, 1:08 PM IST

Updated : May 1, 2020, 2:10 PM IST

எஸ்டோனியா நாட்டுக்கான இந்திய தூதர் கேத்ரீன் கிவி, ஈடிவி செய்தியாளர் ஸ்மிதா சர்மாவுக்கு காணொலி வாயிலாக அளித்த பேட்டியில், “ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவிக்கு மே மாதம் நடைபெறும் தேர்தலில் எஸ்டோனியா தலைமை தாங்கும். கோவிட்-19 பெருந்தொற்று நோயில் 'வெளிப்படைத்தன்மை' மற்றும் 'தகவல் பகிர்வு' ஆகியவை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கும்.

இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கக்கோரி, மார்ச் மாதம் டொமினிகன் குடியரசின் அதிபரின் தலைமையில் நடந்த ரகசியக் கூட்டத்தில் எஸ்டோனியா அதிகப்படியான அழுத்தம் கொடுத்தது. அந்தக் கூட்டம் முழுமை பெறவில்லை. ஆனால், அமெரிக்கா வெளிப்படைத்தன்மை மற்றும் பொது தரவுகளை சரியான நேரத்தில் பகிருமாறு சீனாவை கேட்டுக்கொண்டது.
அப்போது உலகளாவிய ஒத்துழைப்பு மூலம் கோவிட்-19 பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராட முடியும். இந்த விஷயத்தில் யாரையும் பலி கிடா (ஆடு) ஆக்கக்கூடாது என்றும் பெய்ஜிங் பதிலளித்தது.

மே மாதத்தில் நாங்கள் கோவிட்-19 நெருக்கடியை முற்றிலும் தீர்ப்போம். சில நாடுகளிடம் தகவல்களை கேட்போம். ஏனெனில் தற்போதைய கட்டத்தில் எங்களிடம் முழு தரவுகள் மற்றும் வடிவம் இல்லை.

அதனால் இப்போது எந்த முடிவையும் எடுக்கவில்லை. அந்த விஷயத்தில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மேலும் இணைய பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறோம். தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து இணையத் தாக்குதல்களும் கணிசமாக வளர்ந்துள்ளது.
வருகிற 22 ஆம் தேதி எஸ்டோனிய பிரதமர் மோதல் தடுப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான முறைசாரா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார். இது அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கும் வெளிப்படையானதாக இருக்கும்.
இந்த வாரம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், அவரது எஸ்டோனிய பிரதிநிதிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பிலும், ஐ.நா. நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்பட்டது” என்றார்.

இதைத் தொடர்ந்து ஸ்மிதா சர்மா, “பெய்ஜிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கான நிதியுதவியை திரும்பப் பெறுவது குறித்த டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கேத்ரீன் கிவி, “இரு நாடுகளும் இந்நேரத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாறாக பழிவாங்கும் விளையாட்டில் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கக்கூடாது. அமெரிக்காவின் அறிவிப்பை தொடர்ந்து எஸ்டோனியா தனது நிதியின் பங்கை உலக சுகாதார அமைப்புக்கு அதிகரித்துள்ளது.

அனைத்து சூழ்நிலையிலும் உலகளாவிய போர் நிறுத்தத்திற்கான ஐ.நா. பொதுச் செயலாளரின் வேண்டுகோளை நாங்கள் ஆதரிப்போம். இது ஒரு பெரிய மனிதாபிமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் உலகளவில் அனைத்து சிக்கலான பகுதிகளையும் அணுக வேண்டும்" என்று பதிலளித்தார்.

மேலும், “இந்தியா-எஸ்டோனியா இடையேயான டிஜிட்டல் தொழிற்நுட்பப் பகிர்வு குறித்தும் கேத்ரீன் கிவி பேசினார். அப்போது அவர், “ஸ்கைப்—ன் (SKYPE) பிறப்பிடமான எஸ்டோனியா, பல தொழில்நுட்பம் சார்ந்த தொடக்கங்களுக்குச் சொந்தமானது. புதிதாக உருவாகி உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் வெளிப்பாட்டிற்கு முன்பே டிஜிட்டல் தீர்வுகளை வழங்க இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது.

இரு நாடுகளும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இணையப் பாதுகாப்பு துறையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கொண்டுள்ளன. சுமார் 1.3 மில்லியன் மக்களைக் கொண்ட எஸ்டோனியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கான எஸ்டோனியா நாட்டின் தூதர் கேத்ரீன் கிவி, ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டி!

கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்தனர். இருப்பினும், தொடர்பு தடமறிதலை கண்டறிய எந்தவொரு மொபைல் செயலியையும் பயன்படுத்தவில்லை. தரவு பாதுகாப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு காரணமாக தொடர்பு தடமறிதலுக்காக நாங்கள் மொபைல் செயலிகளை பயன்படுத்தவில்லை.

தொழில்நுட்பத்திற்கும், கண்காணிப்புக்கும் இடையில் ஒரு சமநிலையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்த ஒரு புதிரான சூழலுக்கு இது நம்மை அழைத்துச் செல்கிறது. எஸ்டோனியாவில், சட்டம் மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பிற்கு நாங்கள் பெரும் மதிப்பளிக்கிறோம். இத்தகைய முக்கியமான சூழ்நிலையில், கண்காணிப்பையும் அனுமதிக்க ஒரு சமநிலை கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை நாங்கள் அதைப் பயன்படுத்தவில்லை” என்றார்.
இந்தியாவில் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலி (ஆப்) மக்களிடையே ஊக்குவிக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, 'எஸ்டோனியாவில் எங்களிடம் ஒரு உறுதியான சட்ட கட்டமைப்பு உள்ளது. நாங்கள் டிஜிட்டல்மயமாக்கலைத் தொடங்கியதிலிருந்து, அரசாங்கம் சட்டங்களை இயற்றி வருகிறது.
புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பது போதாது. அதே நேரத்தில் தரவு பாதுகாப்பைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்காமல் அரசாங்கங்கள் அவற்றைப் பயன்படுத்த ஊக்குவிக்கின்றன” என்றார்.

எஸ்டோனியா தூதர் கேத்ரீன் கிவி, ஸ்மிதா சர்மா இடையேயான பிரத்யேக உரையாடலை ஆங்கிலத்தில் வாசிக்க கிளிக் செய்யவும்

Last Updated : May 1, 2020, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details