தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'யாரும் நடந்தே ஊருக்குச் செல்லக் கூடாது' - ஹேமந்த் சோரன் உத்தரவு - ஜார்க்கண்ட் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: வெளி மாநில மக்கள் தங்களது ஊருக்கு நடந்தே செல்வதை காவல் துறையினர் முறையாகக் கண்காணித்து, அவர்களை தடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

Hemant Soren
Hemant Soren

By

Published : May 17, 2020, 4:37 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 50 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முழுவதும் தடைபட்டுள்ளதால், வெளி மாநிலத் தொழிலாளர்கள் நடந்தே அவரவர் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்தோ நடந்தே அவரவர் இடங்களுக்குச் செல்லும் மக்களை காவல் துறையினர் கண்காணித்து, அவர்களை தடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

நடந்தே ஊர் திரும்பும் மக்களை முறையான மருத்துவ பரிசோதனை செய்து, அவரவர் சொந்த மாநிலங்களுக்கு பேருந்து மூலம் திருப்பி அனுப்பவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளி மாநில தொழிலாளர்களை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி அலுவலர்களுக்கு சோரன் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவையடுத்து, வெளி மாநில தொழிலாளர்களை கண்காணிக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் காவல் துறை இயக்குநர் ஜெனரல் எம்.வி. ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தொழிலாளர்களின் இன்னல்கள் மத்திய அரசிற்கு சென்றடைய செய்வோம் - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details