மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகர் ரயில் நிலையம் அருகே இன்று காலை 8.30 மணியளவில் பஞ்சாதி விரைவு ரயிலின் 12 பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மும்பையில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து - தண்டவாளம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வந்த பஞ்சாதி விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயில் விபத்து
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மாற்று ரயில் இன்ஜின் மூலம் பெட்டிகளை இணைத்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு பெட்டிகளை கொண்டுசென்றனர்.
பின்னர் விபத்து குறித்து மத்திய ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் உதிசி கூறுகையில், இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது என கூறினார்.