தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புல்வாமாவில் அதிகாலைத் துப்பாக்கிச் சூடு: மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

latest shootout in Pulwama
latest shootout in Pulwama

By

Published : Jan 12, 2020, 5:30 PM IST

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திலுள்ள டிரால், குல்ஷன்போரா பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, காவல்துறையினர் இன்று காலை அப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர்.

இதனால், பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு பயங்கரவாதிகளை நோக்கிச் சுட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களும் வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உமர் ஃபயாஸ் என்றழைக்கப்படும் ஹமாத் கான், ஆதில் பஷீர் என்றழைக்கப்படும் அபு துஜானா மற்றும் பைசன் ஹமீத் என்றும், அவர்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றிய டிஐஜி - துடிதுடித்த ராணுவ வீரர்!

ABOUT THE AUTHOR

...view details