ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபூரின் ரெபன் பகுதியில் இன்று (ஜூலை 12) அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடங்கியது. காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்தில் உள்ளனர் என்று காஷ்மீர் மண்டல காவல் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜூலை 11ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் நாகம் பிரிவில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு வழியாக ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்ததால் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கட்டுப்பாட்டு எல்லையில் சந்தேகத்திற்கிடமான இயக்கம் கண்டறியப்பட்டதை அடுத்து, துருப்புகள் பதுங்கியிருந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து நடந்த மோதலில், இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.