தொடரும் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டர்: பிரிவினைவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் தாக்குதல்
10:00 October 17
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் பிரிவினைவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் ஆகியோரை ஒடுக்கும்விதமாக பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட என்கவுன்டர் சம்பவத்தில் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
லர்நூ பகுதியில் பிரிவினைவாதிகள் தலைமறைவாக இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ராணுவத்தினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது, அவர்களை பிரிவினைவாதிகள் சுட்டுள்ளனர்.
இதற்குப் பதிலடி தரும்விதமாக, ராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டனர். இதில், பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து, ஏகே ரக துப்பாக்கி பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தேடுதல் வேட்டை தொடர்வதாக ராணுவ அலுவலர்கள் தகவல் வெளியிட்டனர்.