தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் தேர்தல் பணிகள் தீவிரம்...!

புதுச்சேரி: மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

By

Published : Apr 17, 2019, 12:53 PM IST

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 970 வாக்குச்சாவடிகளும், 2471 வாக்கு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய 1209 இயந்திரம் வி வி பேட்களும் தயார் நிலையில் உள்ளன.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு பிரத்யேகமாக 2 வாக்கு இயந்திரங்கள் வாக்குச் சாவடியில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் 29 ஆயிரத்து 320 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 27 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 3700 காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் புதுச்சேரியில் உள்ள 222 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 25 மிகவும் பதற்றமனான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

புதுச்சேரியில் முதல்முறையாக இந்தத் தேர்தலில் ஏழு வாக்குச்சாவடிகளில் முழுவதுமாக பெண் அதிகாரிகளைக் கொண்டு வாக்குப்பதிவு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details