மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. அந்த வகையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் வாக்குச்சாவடியில் வெடிகுண்டு வீச்சு! - Explosion
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மக்களவை தொகுதிக்குட்பட்ட புல்வாமா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இத்தாக்குதலால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட முதல் வெடிகுண்டு வீச்சு தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜம்மு-காஷ்மீரில் ஐந்து கட்டங்களாக நடைபெறுகின்றன.