டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘டெல்லியில்1,46,92,136 வாக்காளர்கள் உள்ளனர். 13,750 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தலாம். பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிடப்படும்’ என்றார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றிபெற்றது. கடந்த ஐந்தாண்டுகளில் ஆம் ஆத்மி சிறப்பான ஆட்சியை அளித்துள்ளதால் தற்போது நடைபெறவுள்ள தேர்தலிலும் அக்கட்சியே வெற்றி பெரும் என கூறப்படுகிறது. நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 7 இடங்களில் 7 இடங்களையும் பாஜக கைப்பற்றியிருந்த காரணத்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் சவாலை அக்கட்சி தரும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடும் பட்சத்தில் டெல்லியில் இம்முறை மும்முனை போட்டி நிலவவுள்ளது.
இதையும் படிங்க: ஜேஎன்யூ தாக்குதல்: சுப்ரியா சுலே கண்டனம்!