தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் யுஜிசி முடிவுக்கு கல்வித்துறை அமைச்சர் ஆதரவு - பல்கலைக்கழகங்கள்

இறுதி தேர்வு விவகாரத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் முடிவுக்கு கல்வித்துறை அமைச்சர் டாக்டர். ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Education Minister Ramesh Pokhriyal Ramesh Pokhriyal supports UGC decision final Semester exams இறுதி செமஸ்டர் தேர்வு பல்கலைக்கழகங்கள் ரமேஷ் பொக்கிரியால்
Education Minister Ramesh Pokhriyal Ramesh Pokhriyal supports UGC decision final Semester exams இறுதி செமஸ்டர் தேர்வு பல்கலைக்கழகங்கள் ரமேஷ் பொக்கிரியால்

By

Published : Aug 18, 2020, 5:13 PM IST

Updated : Aug 18, 2020, 7:02 PM IST

இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், “பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்துவது தொடர்பான முடிவு மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மாணவர்கள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாத வகையில் கல்லூரி இறுதி தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன், ஆஃப்லைன் அல்லது இரண்டிலும் நடத்த பல்கழைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது.

சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை ஏற்கனவே நடத்தியுள்ளன. மாணவர்களின் எதிர்காலங்களை மனதில் கொண்டு, நெருக்கடியான நோய்த்தொற்று நேரத்திலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

முன்னதாக அவர் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள போவதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த மாநாட்டில், கல்வி அமைச்சர் பேராசிரியர் ரன்பீர் சிங், டெல்லி என்.எல்.யு துணைவேந்தர், யு.ஜி.சி தலைவர் டி பி சிங், ஏ.ஐ.யு தலைவர் பேராசிரியர் தேஜ் பிரதாப், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ,) தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுதே உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க :ஹோடான் விமான தளத்தில் திருட்டுதனமாக வீரர்களை நிறுத்திய சீனா!

Last Updated : Aug 18, 2020, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details