அந்நியச் செலாவணி மேலாண்மை சட்ட (FEMA) விதிகளின் அடிப்படையில் ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் அமைந்துள்ள நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சுங்க வரி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), வருமான வரி ஆகியவற்றில் நடைபெறும் பெரும் வரி ஏய்ப்புகளைக் கண்டறிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் அமைந்துள்ள பிரபலமான நகைக்கடைகளில் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் காட்டப்படாத மூன்று கோடியே 75 லட்சம் ரூபாய், 26.97 கிலோ தங்கம், 12.22 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக பணம், தங்க நகைகள் ஆகியவை சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து ஜெய்ப்பூருக்கு கடத்தப்படுவதாக அமலாக்கத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: தாயகம் திரும்ப விரும்புபவர்கள் தூதரகத்தைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தல்