கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர் அண்மையில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகின.
அதில், இந்தக் கடத்தலில் பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலர் ரவீந்திரனுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிவித்தார். அதனடிப்படையில், ரவீந்திரனுக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.