பிரியங்கா காந்தியின் கணவரும், சோனியா காந்தியின் மருமகனுமான ராபர்ட் வத்ரா, லண்டலின் சொத்து வாங்கியத்தில் பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ராபர்ட் வத்ராவை கைது செய்ய அனுமதி கோரும் அமலாக்கத்துறை! - ராபர்ட் வத்ரா
டெல்லி: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவை சிறையில் வைத்து விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது.
இந்த வழக்கில் வத்ராவை கைது செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை வித்தது அவருக்கு மார்ச் 19ம் தேதி வரை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த ஜாமீனை நீட்டிக்ககோரி வத்ரா தாக்கல் செய்த மனு இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதின்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கோரியது. ஆனால் ராபர்ட் வத்ராவை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், அவரின் ஜாமீனை மார்ச் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.