பஞ்சாப் தேசிய வங்கி உட்பட பல வங்கிகளில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்சி ஜூலை 2018ஆம் ஆண்டு ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றார். இதனையடுத்து அலாக்கத்துறையினர் ரூ. 6,129 கோடி மதிப்புள்ள அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்தனர். மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டு வர பல முயற்சிகள் செய்யப்பட்டன.
மெஹுல் சோக்சியை இந்தியாவுக்குக் கொண்டுவர அமலாக்கத்துறையினர் திட்டம்! - வைர வியாபாரி
மும்பை: பல வங்கிகளில் மோசடி செய்த வைர வியாபாரி மெஹுல் சோக்சியை மருத்துவ வசதியுடன் இந்தியாவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மெஹுல் சோக்சியின் உடல்நிலை சரியில்லை எனக்கூறி மும்பை நீதிமன்றத்தில் அவர் தரப்பு முறையிட்டது. இதனை எதிர்த்த அமலாக்கத் துறையினர் தரப்பில், "மெஹுல் சோக்சி அளித்த மருத்துவ காரணங்கள் அனைத்தும் வழக்கை தாமதப்படுத்துவதாக இருக்கிறது. விசாரணையில் பங்கேற்க அவருக்கு பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது" என மும்பை நீதிமன்றத்தில் பதில் மனு தாக்க செய்யப்பட்டது.
மேலும் அவர் விரும்பினால் அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் எனவும் அமலாக்கத்துறையினர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.