நில அபகரிப்பு வழக்கு தொடர்பான பண மோசடி புகாரின் பேரில் கோவாவின் செருலா கம்யூனிடேட்டின் முன்னாள் வழங்கறிஞர் அக்னெலோ சி. லோபோ உள்ளிட்ட பலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று (நவ. 7) சோதனை நடத்தியது.
கோவா காவல் துறை குற்றப்பிரிவு பதிவுசெய்த முதல் அறிக்கை தகவலின்பேரில் நடந்த சோதனையில், லோபோவின் சகோதரர் ரெஜினால்டோ, செருலா ஜோசப் டி’சாவின் முன்னாள் அலுவலர், முன்னாள் எழுத்தர் ராஜேஷ் சுஹாஸ் வெரெங்கர் உள்ளிட்டோரின் சொத்துகளும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அமலாக்கத்துறை சார்பில் கூறுகையில், “சட்டவிரோதமாக நில ஒதுக்கீடு, சதித்திட்டங்கள், செருலாவின் கம்யூனிடேட் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்கள், பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி பல பழைய ஆவணங்கள், 1960களின் பழைய வெற்று இந்திய முத்திரை ஆவணங்கள், போர்த்துகீசிய முத்திரைகள் எனப் பலவற்றை கைப்பற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...பிரபல ஐடி நிறுவனத்தில் வருமான வரி சோதனை: சுமார் ரூ.1000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு