தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இக்பால் மிர்ச்சியின் 203 கோடி ரூபாய் சொத்துகளை கையகப்படுத்திய அமலாக்கத்துறை

டெல்லி : நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான மறைந்த இக்பால் மிர்ச்சியின் 203.27 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, இந்திய அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.

இக்பால் மிர்ச்சியின் 203 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது!
இக்பால் மிர்ச்சியின் 203 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது!

By

Published : Sep 23, 2020, 4:15 AM IST

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளியும், பிரபல தாதாவுமான தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் இக்பால் மிர்ச்சி. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தனது 63ஆவது வயதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இக்பால் மிர்ச்சி மீது 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு, போதைப்பொருள் கடத்தல், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

உலக அளவில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த மிர்ச்சியை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசு பலமுறை இங்கிலாந்து நாட்டிடம் கோரிக்கை விடுத்திருந்தும் அதனை அந்நாட்டு அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், சர்வதேச அளவில் பெரும் குற்றவாளியாகக் கருதப்பட்டு வந்த இக்பால் மிர்ச்சியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 203.27 கோடி ரூபாய் சொத்துகளை இந்திய அமலாக்கத்துறை நேற்று (செப்.22) கையகப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் இருக்கும் மிட்வெஸ்ட் ஹோட்டல் கட்டடம், 14 வணிக வளாகங்கள், அவரது குடியிருப்பு சொத்துக்கள் ஆகியவை பணமோசடி தடுப்பு சட்டம் 2002இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details