கொரோனா, யெஸ் வங்கி, பொருளாதார மந்த நிலை ஆகிய விவகாரங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இவைகளை முன்வைத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவிடம் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே இருந்த செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர், "கொரோனாவால் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. ஆனால், பிரமதரும் நிதியமைச்சரும் அமைதி காக்கின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். மோடியின் நண்பர்களால் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள யெஸ் வங்கியை மீட்டெடுப்பதற்கே சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை ஆகியவற்றின் வட்டி விகிதத்தை எஸ்பிஐ குறைத்துள்ளது. சென்செக்ஸ் 2, 700 புள்ளிகள் குறைந்துள்ளதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.