மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை ஆறாம் கட்டமாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! - Punjab minister
டெல்லி: 'நரேந்திர மோடி ஒரு துரோகி' என கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில், பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்து பல கோடி மதிப்பிலான பணத்தை கொள்ளையடித்தது மட்டுமின்றி, வங்கிகளில் மோசடி செய்த தொழிலதிபர்களை நாட்டை விட்டு தப்பிச் செல்லவிட்ட நரேந்திர மோடி ஒரு துரோகி" என தெரிவித்தார்.
இது பற்றி பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், நவ்ஜோத் சிங் சித்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.