இது குறித்து கண்காணிப்பு பொறியாளர் ரவி கூறுகையில், "யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுச்சேரியில் 2019, 2020ஆம் ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மின்கட்டணம் 4. 59 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது.
தேர்தல் முடிந்ததும் உயர்ந்த மின் கட்டண விலை! பொதுமக்கள் ஷாக் - புதுச்சேரி
புதுச்சேரி: தேர்தல் முடிந்து 23ஆம் தேதி முடிவு வெளியான நிலையில் புதுச்சேரியில் மின்கட்டணம் 4.59 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
EB fare increased in puducherry
இதனால் மின் கட்டணம் ரூ. 100 செலுத்தும்போது துணைக்கட்டணம் நான்கு விழுக்காடுடன் சேர்த்து மொத்தம் 8.59 விழுக்காடு உயர்வுடன் 108.59ஆக கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த மின் கட்டண உயர்வு ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேபோன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி சராசரியாக யூனிட்டுக்கு ரூ. 5.68 வசூலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.