மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில் யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார்மயமாக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த முடிவிற்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
புதுச்சேரியில் மத்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் - புதுச்சேரியில் மத்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம்
புதுச்சேரி: யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி மின் துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஒரு மணிநேரம் பணிகளை புறக்கணித்து திப்பு ராயப்பேட்டை பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவற்றை தவிர்க்க மின் துறை அனைத்து பொறியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து ஊழியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர்.
புதுச்சேரி மின் துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி மின் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.