தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்கதேச துறைமுகங்களை வடகிழக்கு மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்: மக்மூத் ஹாசன் பிரத்யேக பேட்டி - வங்கதேச தகவல் தொடர்பு அமைச்சர் மக்மூத் ஹாசன்

ஹைதராபாத்: இந்திய வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேச துறைமுகங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இது இருநாடுகளுக்கும் பயனாக இருக்கும் என்று வங்கதேச தகவல் தொடர்பு அமைச்சர் மக்மூத் ஹாசன் கூறினார்.

Eastern Indian states can look towards our ports, says B'desh Minister
Eastern Indian states can look towards our ports, says B'desh Minister

By

Published : Jan 16, 2020, 9:21 PM IST

வங்கதேச தகவல் தொடர்பு அமைச்சர் மக்மூத் ஹாசன் இந்தியா வர இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜன16) ஈடிவி பாரத் இணைய ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனான பேச்சுவார்த்தை எவ்வாறு இருக்கும்.?

பதில்:பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்க இருக்கிறோம். குறிப்பாக இருநாட்டு தொடர்பு, கலாசார ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம். வங்கதேசத்தின் அதிமுக்கிய அண்டை நாடு இந்தியா. அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்தின் துறைமுகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இது இருநாட்டுக்கும் பயனாக இருக்கும். இதுகுறித்தும் பேசுவோம்.

கேள்வி: இந்தியாவும்-வங்கதேசமும் இணைந்து தயாரிக்கும் முஜிபுர் ரகுமான் திரைப்படம் பற்றிய கருத்தென்ன?

பதில்: இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உதவியுடன் ஷேக் முஜிபுர் ரகுமான் வாழ்க்கை வரலாற்று திரைப்படம், டைரக்டர் ஷியாம் பெனகல் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இப்படம் வங்கதேசத்தின் நிறுவனர் (முஜிபுர் ரகுமான்) நூற்றாண்டு தினத்தில் வெளியிடப்படும். இந்தியாவில் மிகப்பெரிய சினிமா தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியத் திரைப்படங்கள் சீனா உள்பட உலகெங்கிலும் திரையிடப்படுகின்றன.

வங்கதேசத்திலும் சினிமா தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். தாகா அருகே திரைப்பட நகரம் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதற்கு இந்தியாவின் உதவி தேவை.உலகிலேயே மிகப்பெரியராமோஜி திரைப்பட நகருக்கும் நான் வந்துள்ளேன்.

கேள்வி: டிஜிட்டல் ஊடக பரபரப்புகள் குறித்து தங்களின் கருத்தென்ன?

வங்கதேச துறைமுகங்களை வடகிழக்கு மாநிலங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்: மக்மூத் ஹாசன் பிரத்யேக பேட்டி

பதில்: இன்றைய உலகின் உண்மைகள் அவை. வங்கதேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர், ஆறு மில்லியன் (60 லட்சம்) மக்கள் இணையத்தை பயன்படுத்தினர். ஆனால் இன்று ஏறக்குறைய 11 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். புதிய ஊடகங்கள் மக்களுக்கு தகவல்கள் கிடைக்கும் வழியை திறந்து விட்டிருக்கின்றன.

இருப்பினும் வங்கதேசத்தில் சில ஊடக நிறுவனங்கள் பொறுப்பற்று நடந்து கொள்கின்றன. ஆகவே இணையத்தில் சில வரைமுறைகளை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. ஊடகத்தை அரசாங்கத்தில் பதிவு செய்வது அவசியமாக்கப்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்யும் ஊடகங்கள், உளவு நிறுவனத்தால் ஆராயப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றன.

இவ்வாறு வங்கதேசத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மக்மூத் ஹாசன், ஈடிவி பாரத் இணைய ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.

இதையும் படிங்க: கொல்கத்தாவுக்கு கிரிக்கெட் பார்க்க வந்த வங்க தேச பிரதமர்!

ABOUT THE AUTHOR

...view details