தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பினராயி விஜயன் பதவி விலகக்கோரி மத்திய இணையமைச்சர் உண்ணாவிரதம்...!

டெல்லி : கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலக வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

கேரள முதலமைச்சரை பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்திய மத்திய இணையமைச்சர்  !
கேரள முதலமைச்சரை பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்திய மத்திய இணையமைச்சர் !

By

Published : Aug 2, 2020, 10:14 PM IST

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அரசின் துணைத் தூதரகத்திற்கு ஜூலை 5ஆம் தேதி அன்று அனுப்பப்பட்ட கொரியரில் 30 கிலோ தங்கம் இருந்தது சோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து திருவனந்தபுர சுங்க அலுவலர்கள் அதனை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து அது குறித்த விசாரணையைத் தொடங்கினர்.

பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, தங்க கடத்தலில் தொடர்புடைய ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் அலுவலர் பி.எஸ்.சரித், தகவல் தொழில்நுட்ப ஆலோசகரான ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கேரளாவின் முதன்மை செயலர் சிவசங்கரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, அண்மையில் விடுவிக்கப்பட்டார்.

கேளர காங்கிரஸ் கமிட்டி மற்றும் பாஜக ஆகியவை பினராயி விஜயனை தொடர்ந்து குற்றஞ்சாட்டி, அவரை பதவி விலகக் கோரி வருகின்றன. இந்நிலையில், தங்க கடத்தல் வழக்கில் அலுவலர்களின் தொடர்பு இருப்பதைக் காரணம் காட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட் 2) மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தனது டெல்லி இல்லத்தில் ஒருநாள் உண்ணாநிலையை கடைப்பிடித்தார். இதை பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் தொடங்கிவைத்தார்.

இதன்போது பேசிய முரளிதர் ராவ், "பினராயி விஜயன் தலைமையிலான கேரளாவின் எல்.டி.எஃப் அரசு தேசத்திற்கு எதிராக சதி செய்து வருகிறது. இது வெறும் தங்க கடத்தல் தொடர்பான ஒரு விஷயம் மட்டுமல்ல, இது பயங்கரவாதிகளின் நிதி வலையமைப்பை வலுப்படுத்தும் சதியையும் கொண்டிருப்பதாகும். இந்த குற்றம் ஊழல் மற்றும் பயங்கரவாதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை நாம் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது. மத்திய அரசுக்கு எதிரான சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கான நிதி இந்த தங்கக் கடத்தல் மூலம் கிடைத்திருக்க வேண்டும்.

கேரள முதலமைச்சர் தன்னை குற்றமற்றவர் என்று பாசாங்கு செய்கிறார். கேரளாவில் எல்.டி.எஃப் அரசு நடத்தும் ஊழல் அரசை தேசம் கவனித்து வருகிறது. கடத்தல் வழக்கில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று விஜயன் கூறுகிறார். ஆனால், தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களின் க்ளைமாக்ஸை போலவே, விஜயனும் வில்லன் என்ன உண்மை நிரூபிக்கப்படும். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேளர முதலமைச்சர் பினராயி விஜயன், "தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான ஒரு சுயாதீன நிறுவனத்தின் விசாரணைக்கு நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஆட்சிக்கு வந்த எங்கள் அரசை கவிழ்க்க காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்து வேலை செய்து வருகின்றன. உண்மை வெல்லும். எங்கள் அரசு குற்றமற்ற அரசு என்ற உண்மை உறுதியானது" என பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details