பெங்களூர்:கர்நாடக மாநிலம் கிருஷ்ணபுரம் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபரை இரண்டு ரவுடிகள் குடிபோதையில் தாக்கியுள்ளனர். நடுசாலையில், குடித்துவிட்டு கத்திக்கொண்டிருந்த இரண்டு ரவடிகள், கத்தி, கட்டையால் தேவேந்திரா என்பவரைத் தாக்கியுள்ளனர்.
சாலையில் நடந்து சென்றவரை குடிபோதையில் தாக்கிய ரவுடிகள்: வைரல் காணொலி - latest tamil news
கர்நாடக மாநிலம் கிருஷ்ணபுரம் நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்றவரை இரண்டு ரவுடிகள் குடிபோதையில் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
குடிபோதையில் சாலையில் நடத்து சென்றவரை தாக்கிய ரவுடிகள்; வைரல் காணொளி
பாதிக்கப்பட்ட தேவேந்திரா இதனை வீடியோவாக எடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரவுடிகள் இருவரும் தப்பியோடிவிட்டனர்.
இதையும் படிங்க:சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களை மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் : வைரல் காணொலி