தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மின் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி - நூலிழையில் உயிர் தப்பிய ’குடிமகன்’ - தமிழ்நாடு செய்திகள்

புதுச்சேரி : காரைக்கால் அருகே குடிபோதையில் மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை பிடித்தவர் உயிர் தப்பினார்!
குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை பிடித்தவர் உயிர் தப்பினார்!

By

Published : Jun 9, 2020, 5:20 PM IST

புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் (வயது 40), குடிபோதைக்கு அடிமையாகியுள்ள இவர், மின் கம்பம் உள்ளிட்ட உயரமான பகுதிகளில் ஏறிக்கொண்டு குடிப்பதற்கு பணம் கேட்டு உடன் இருப்பவர்களை மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று (08-09-2020) மாலை திருப்பட்டினம் மாந்தோப்பு சாராயக்கடை அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறி, வழக்கம்போல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் மின்கம்பத்தில் ஏறுவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து, மின்சாரத்தை நிறுத்தி உள்ளனர். இதனால் போதையில் மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்தும், மின்சாரம் தாக்காமல், கை நழுவி மின் கம்பத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை பிடித்தவர் உயிர் தப்பினார்!

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பட்டினம் காவல் துறையினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

இதையும் படிங்க...NIL ஜிஎஸ்டி தாக்கல்செய்பவரா நீங்கள்? - அப்படின்னா இது உங்களுக்கான நற்செய்திதான்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details