பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு எனப்படும் டி.ஆர்.டிஓ.(DRDO) தயாரித்த ஹைபர்சோனிக் அதிவேக விமானத்தின் சோதனை இன்று ஒடிசாவில் உள்ள கலாம் தீவில் நடைபெற்றது. HSTDV (Hypersonic Technology Demonstrator Vehicle) என்ற இந்த விமானம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஸ்காரம்ஜெட் உந்துவிசையைப் பயன்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை வெற்றியடைந்த நிலையில், டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்த வெற்றியில் பங்களிப்பாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகள், இந்த சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது. பிரதமரின் கனவான தற்சார்பு இந்தியா என்ற பாதையில் இது முக்கிய மைல்கல் எனத் தெரிவித்துள்ளார்.