பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் ட்ரோன்களை பயன்படுத்தி இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், ட்ரோன்களை தாக்கி அழிக்கும் ஆன்டி ட்ரோன் இயந்திரத்தை டிஆர்டிஒ அமைப்பு வடிவமைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானப் படை, ராணுவம், துணை ராணுவப் படை உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆன்டி ட்ரோன் இயந்திரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது.