தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமரின் ஒப்புதலுடன் ஆறு மாதம் முன்பே மிஷன் திட்டம் தொடங்கப்பட்டது - டி.ஆர்.டி.ஒ தலைவர்! - sateesh

டெல்லி: செயற்கைக்கோளை துல்லியாக தாக்கும் வல்லமை கொண்ட ஏ- சாட் ஏவுகணை திட்டம் 6 மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது என டி ஆர் டி ஒ தலைவர் சத்தீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சத்தீஷ் ரெட்டி

By

Published : Mar 28, 2019, 12:52 PM IST


பிரதமர் மோடி நேற்றைய தினம் (புதன்கிழமை) நாட்டு மக்களிடையே மிக முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தார். அதன்படி பேசிய மோடி, செயற்கைக்கோள்கள் துல்லியமாக தாக்கும் வகையில் டி.ஆர்.டி.ஒ வெற்றிகரமான சோதனையை மூன்று நிமிடங்களில் மேற்கொண்டதாகக் கூறினார். இதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதணை படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்துள்ள டி.ஆர்.டி.ஒதலைவர் சத்தீஷ் ரெட்டி, "தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனையின் அடிப்படையில் பிரதமர் மோடியின் ஒப்புதலுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு மிஷன் சக்தி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை கொண்டு இரவும் பகலுமாக சோதனைக்கான பணிகளை நடத்தினர்.

ஒடிசாவின் பாலாசோர் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை சரியாக 11.16 மணிக்கு ஏவப்பட்ட ஏவுகணை 3 நிமிடங்களில் திட்டமிட்டபடி 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள செயற்கைக்கோளை தகர்த்தது. இந்தியா பொறுப்புள்ள நாடு என்ற அடிப்படையில் விண்வெளியை பாதுகாப்புடன் வைக்கவும், அங்கு தேவையற்ற பொருட்கள் வேகமாக அகற்ற முடிவு செய்தோம்" என்றார்.

இதற்கிடையே, விண்வெளியில் அனைத்து நாடுகளும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சோதணையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து இந்த தொழில்நுட்பத்தை வைத்துள்ள நான்காவது நாடு என்ற இடத்தில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details