புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் புதுச்சேரி ட்ரம்மர் ஷோன் என்ற நிறுவனம் க்ரீன் புதுச்சேரி (பசுமை புதுச்சேரி) என்ற தலைப்பில் 70 சிறுவர்களைக் கொண்டு ட்ரம்ஸ் நிகழ்ச்சியை நடத்தியது. இதற்கு லக்ஷ்மன் சுருதி இயக்குநர் லக்ஷ்மணன் கலந்துகொண்டு நிகழச்சியைத் தொடங்கிவைத்தார்.
புதுச்சேரியில் ட்ரம்ஸ்களை இசைத்து அசத்திய சிறுவர்கள்
புதுச்சேரி: கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் சுமார் 70 சிறுவர்கள் ட்ரம்ஸ்களை இசைத்து அசத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி அங்கிருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
Drams fun
இந்நிகழ்ச்சியில் 70 சிறுவர்கள் கலந்துகொண்டு ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ட்ரம்களை இசைத்து மகிழ்வித்தனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட பலர் ரசித்துச் சென்றனர். முன்னதாக பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.