தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாட்டிலிருந்து சென்ற முதல் பெண் ஆளுநர் தமிழிசை! - தமிழிசை சவுந்தரராஜன், பாஜக, தெலுங்கானா, பெண் ஆளுநர்

டெல்லி : தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் தென்னிந்தியாவில் இருந்து செல்லும் முதல் பெண் ஆளுநர் ஆவார்.

soundararajan-special

By

Published : Sep 1, 2019, 11:38 PM IST

2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது, தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து செல்லும் முதல் பெண் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானாவிலும் முதல் பெண் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார். இருப்பினும், இவர் விமர்சனங்களையும் தோல்வியையும் கண்டு அயராது உழைத்தார். வரும் டிசம்பர் மாதம் இவரின் தலைவர் பதவிக்காலம் முடியும் நிலையில், தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பெண் ஒருவர் ஆளுநராகி இருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும், இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் தமிழிசை ஈர்த்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details