தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொது இடங்களில் எச்சில் துப்ப வேண்டாம் : பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

சண்டிகர்: புகையிலையை மென்று பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்றும் மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

Balbir Singh Sidhu  Health Minister  COVID-19  tuberculosis  பஞ்சாப்பில் எச்சில் துப்பினால் அபராதம்  கோவிட்-19 சுகாதார பாதிப்பு
Balbir Singh Sidhu Health Minister COVID-19 tuberculosis பஞ்சாப்பில் எச்சில் துப்பினால் அபராதம் கோவிட்-19 சுகாதார பாதிப்பு

By

Published : Jun 1, 2020, 10:38 AM IST

கோவிட் -19, காசநோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதால் பொது இடங்களில் புகையிலையை மென்று எச்சில் துப்பக் கூடாது என்று பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து அம்மாநில மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீறி பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக புகையிலை தடை தினத்தை முன்னிட்டு பேசிய நேற்று பேசிய சித்து, “புகை பிடிக்காத சமூகத்தை உருவாக்கும் வகையில், புகையிலை பயன்பாட்டின் கொடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரையை மாநில அரசு தொடங்கியுள்ளது.

இந்த பரப்புரையின் நோக்கம், புகையிலை பழக்கத்திலிருந்து பொதுமக்களை மீட்க வேண்டும் என்பதே ஆகும். புகையிலை பயன்பாட்டாளர்கள்களை புற்றுநோய் எளிதில் தாக்கும் அபாயம் உண்டு. அதிலிருந்து அவர்கள் மீட்கப்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, இதுகுறித்து பேசிய க்ளோபல் பாலிசி அண்ட் ரிசர்ச் (Global Policy and Research)இன் துணைத் தலைவர் நந்திதா முருகுத்லா, “வெகுஜன ஊடக பரப்புரைகள் புகையிலையை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.

இந்த விழிப்புணர்வு பரப்புரையை ஊக்குவித்த மாநில சுகாதாரத் துறையை நாங்கள் பாராட்டுகிறோம். புகையிலை பயன்பாட்டின் ஆபத்துகளை சுட்டிக்காட்டுவது மூலம், புகையிலை உபயோகிப்பவர்கள் இதிலிருந்து விடுபட முயற்சிப்பார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு

ABOUT THE AUTHOR

...view details