மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின. அதில் பெரும்பாலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கருத்துகள் வெளியாகின.
வதந்திகளை நம்பாதீர் - பிரியங்கா அறிவுரை! - Priyanka
டெல்லி: கருத்துக் கணிப்புகளைப் பார்த்து நம்பிக்கையை இழக்காதீர்கள் என, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரியங்கா காந்தி
இந்நிலையில், துவண்டிருக்கும் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளால் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நம்பிக்கையுடன் இருங்கள். இந்த நேரத்தில் நமது கவனம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டிராங் ரூம் மீதும், வாக்குகளை எண்ணும் மையங்களின் மீதும்தான் இருக்க வேண்டும்" என அறிவுரை வழங்கியுள்ளார்.