நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் ஆகியோர் மார்ச் 20ஆம் தேதி தூக்கிலிடப்படவுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் பேட்டி எடுக்க வேண்டும் என தனியார் ஊடகம் ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க அவர்களைப் பேட்டி எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிர்பயா குற்றவாளிகளைப் பேட்டி எடுத்து ஊக்குவிக்க வேண்டாம் - டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி: நிர்பயா குற்றவாளிகளைப் பேட்டி எடுக்க முயன்ற ஊடகத்திடம், அவர்களை ஊக்குவிக்க வேண்டாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, நீதித்துறையை கேலிக்குரியதாக்கும் அவர்களை ஊக்குவிக்காதீர்கள் எனத் தெரிவித்தார். மேலும், வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, நிர்பயா வழக்கு குற்றவாளிகளிடம் பேட்டி எடுக்க திஹார் சிறைத் துறையிடம் அந்த ஊடகம் பிப்ரவரி 25ஆம் தேதி கோரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு அனுமதி வழங்க சிறைத் துறை மறுப்பு தெரிவித்தது.
இதையும் படிங்க: குழந்தையின் உடம்பில் ஊசிகள் - இருவர் மீது வழக்குப்பதிவு